About

MADURAI PRASHITHAM NATYAKALALAYA


பரதநாட்டிய கலைஞர் திருமதி. கி.பெ.கோகிலா வாணி பரதநாட்டிய துறையில் சிறந்த நடன செயற்காட்சியாளர், நாட்டிய வடிவமைப்பாளர் மற்றும் ஆசிரியர். இவர் சென்னையில் "மதுரை பிரஷித்தம் நாட்டிய கலாலயா" எனும் நடன பள்ளியை நிறுவி இயக்கி வருகிறார். சிறந்த நாட்டிய கலைஞரான கலைவளர்மணி. திருமதி. சாந்தினி அருணகிரி அவர்களின் 'மதுரை நாட்டியகலாலயா' எனும் நாட்டிய பள்ளியில் தனது ஏழாவது வயதில் நாட்டியம் பயில துவங்கினார். குருவின் அன்பும் அரவணைப்புமே இவருக்கு நாட்டியத்திலும் ஈடுபாட்டை ஏற்படுத்தியது. பள்ளி பயிலும் காலங்களில் பள்ளியில் நடைபெற்ற அனைத்து நாட்டிய நிகழ்ச்சிகளிலும், போட்டிகளிலும் பங்கு கொண்டு பல்வேறு பரிசில்களும், சிறந்த பெயரும் பெற்றுள்ளார். பரதநாட்டியம் மட்டுமல்லாது நாட்டுப்புற கலைகளான காவடியாட்டம், ஒயிலாட்டம் போன்ற நடனங்களும், மேற்கத்திய நடனங்களிலும் தேற்ச்சியுடன் பங்கு பெற்றுள்ளார். மதுரை மாவட்ட கலை இலக்கிய கழகம் நடத்தும் பள்ளி மாணவ மாணவிகளுக்கான வட்டம் மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளில் நடன போட்டிகளில் 1993 முதல் 1999 வரை பங்கு பெற்று அனைத்து போட்டிகளிலும் இவரே முதல் மற்றும் இரண்டாம் பரிசில்களை பெற்றுள்ளார்.

குரு. திருமதி. சாந்தினி அருணகிரி அவர்களின் நாட்டிய பள்ளியின் மூலம் நடைபெறும் நாட்டிய நிகழ்ச்சிகளிலும், இவர் நாட்டியம் பயில துவங்கிய நாள் முதல் இன்று வரை 'மதுரை நாட்டியகலாலயா' வின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு கருத்து வடிவம் பொருந்திய நாட்டிய நாடகங்களிலும் பாங்குற பங்கேற்று சிறப்பு பெற்று வருகிறார். குரு. திருமதி. சாந்தினி அருணகிரி அவர்களின் ஏழாண்டு கடுமையான பயிற்ச்சியில் 1997 - ஆம் வருடம் ஜுலை மாதம் 8 - ம் தேதி கோகிலா வாணி அவர்களின் பதினைந்தாவது வயதில் அவர்களின் தலைமையில் பரதநாட்டிய அரங்கேற்றம் சிறப்புற நடைபெற்றது. நாட்டியத்தின் மீதான இவரது ஈடுபாடு மேடை நிகழ்ச்சிகளில் நேர்த்தியையும், கவர்ச்சியையும், முன்னிலையையும் பெற்று தந்தது. மேல்நிலை பள்ளி பயிலும் காலத்திலேயே தனது ஆசிரியருக்கு உறுதுணையாக அவரது நாட்டிய பள்ளியின் தொடக்க நிலை குழந்தைகளுக்கு நாட்டியம் பயிற்றுவிக்கும் பணியை துவங்கினார்.

1999 முதல் 2002 வரை மதுரை காமராசர் பல்கலை கழகத்திற்கு பாத்யபட்ட நாகமலை புதுக்கோட்டையில் உள்ள S. வெள்ளைச் சாமி நாடார் கல்லூரியில் வணிகவியல் நிர்வாகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். கல்லூரி மூன்று ஆண்டுகளிலும் மாவட்ட அளவிலான இளையோர் விழாவில் பரதநாட்டியம் மற்றும் நாட்டுப்புற நடனப் போட்டிகளில் முதல் இடத்தை வென்றுள்ளார். பள்ளி, கல்லூரி படிப்பை முடித்து இவர் ''BEST OUTGOING STUDENT'' ஆக வந்துள்ளார்.

2006 - ஆம் ஆண்டில் முதன்முதலாக சென்னை வேளச்சேரியில் நடன வகுப்பினை துவங்கினார். திருமதி. லதா ரஜினிகாந்த் அவர்கள் நடத்தும் தி ஆஸ்ரம் பள்ளியில் நடன ஆசிரியையாக பணியாற்றி அவரிடம் நற்பெயரையும், மதிப்பையும் பெற்றார். பின்னர் வளசரவாக்கத்தில் உள்ள பொன்வித்யாஸ்ரம் பள்ளியில் நான்கு ஆண்டுகள் நடன ஆசிரியராக பணியாற்றினார். நாட்டியத்தின் மீதான தீராத பேரார்வமும், சுய ஊக்குவிப்பும் கொண்ட இவர் சிறந்த புதிய தலைமுறை நாட்டிய கலைஞர்களை உருவாக்கும் பொருட்டு 2011- ஆம் வருடம் சென்னை, போரூர், சக்தி நகரில் "மதுரை பிரஷித்தம் நாட்டியகலாலயா" தனது சொந்த ஊர் மற்றும் மகளின் பெயருடன் கூடிய நாட்டிய பள்ளியை நிறுவி சிறந்த முறையில் இயக்கி வருகிறார். 2012 - ஆம் ஆண்டு முதல் பாரம்பரியம் மிக்க பரதநாட்டிய வித்வான், நட்டுவாங்க மேதை, குரு. தஞ்சாவூர். ஹரிஹரன் ஹேரம்பநாதன் அவர்களிடம் நடனமும், நட்டுவாங்கமும் பயிற்சி பெற்று அவரின் தலைசிறந்த மாணவியாக அவருடைய வழிகாட்டுதலின்படி பாங்குற செயல்பட்டு வருகிறார்.

Our Services

Bharathanatiyam
Choreographer
Award

Let the Learning Begin

Bharathanatiyam Artist Smt. K.P.GOKILA VANI is an award Winning performer, choreographer and the teacher in the field of Bharathanatiyam.

© 2018 MADURAI PRASHITHAM NATYAKALALAYA. All rights reserved | Design by Liveindianevents